துபாய்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் குவித்தது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, கொல்கத்தாவை முதலில் களமிறங்க கேட்டுக்கொண்டது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் துவக்க வீரர் ஷப்மன் கில் 34 பந்துகளில் 47 ரன்களை அடித்தார்.
இயான் மோர்கன் 23 பந்துகளில் 34 ரன்கள், ஆன்ட்ரே ரஸ்ஸல் 14 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 24 ரன்களும், நிதிஷ் ரானா 22 ரன்களும் அடிக்க, அந்த அணியால் 174 ரன்களை எட்ட முடிந்தது.
ராஜஸ்தான் அணி சார்பில் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு 2 விக்கெட்டுகள் கிடைத்தன.
200க்கு மேலான ரன்களையே எளிதாக விரட்டிப் பிடிக்கும் ராஜஸ்தான் அணிக்கு, 174 ரன்களை வைத்து கடிவாளம் போட முடியுமா? என்று கேள்வி எழுந்துள்ள நிலையில், கிரிக்கெட்டில் எதுவும் நடக்கலாம் என்ற நிலையில், யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.