அபுதாபி: ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் கொல்கத்தாவை பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டது. அதன்படி, களமிறங்கி கொல்கத்தா அணியில் துவக்க வீரர் ஷப்மன் கில் 37 பந்துகளில் 36 ரன்களை மட்டுமே அடித்தார்.
முன்னதாக இறக்கிவிடப்பட்ட ராகுல் திரிபதி 16 பந்துகளில் 23 ரன்களை அடித்தார். நிதிஷ் ரானா 20 பந்துகளில் 29 ரன்களையும், புதிய கேப்டன் இயான் மோர்கன் 23 பந்துகளில் 34 ரன்களையும் அடித்தனர்.
பழைய கேப்டன் தினேஷ் கார்த்திக் 14 பந்துகளில் 29 ரன்களை அடித்தார். இறுதியில், 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை எடுத்தது கொல்கத்தா அணி.