டெல்லி: கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரத்தை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், மத்தியஅரசின் துறைஅதிகாரிகள் மற்றும் பிரபல மருத்துவர்களைக் கொண்ட தேசிய அளவிலான குழு அமைத்து உத்தரவிட்டு உள்ளது.

இந்த குழுவினர்,  மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக தேவைய நடவடிக்கை மத்திய, மாநில அரசுகளுக்கு ஆலோசனை வழங்கு வார்கள்.

மம்தா பானர்ஜி காட்டாட்சி செய்து வரும்,  மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில்  உள்ள ஆர்ஜி கார் மருத்துவமனையில், முதுநிலை  பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த  விவகாரத்தை உச்சநீதிமன்றம் தானாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. உச்சநீ திமன்ற  தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு  விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில், எப்போதும் போல குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடும் முன்னாள் காங்கிரஸ் மத்திய அமைச்சரான  வழக்கறிஞர் கபில்சிலே இந்த வழக்கிலும் வாதாடி வருகறார். அவரது நடவடிக்கை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. பணம் கொடுத்தால், எதையும் செய்யும் கபில்சிபல் போன்றவர்கள் நாட்டின் சாபக்கேடு என்றும், இவரது குடும்பத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றிருந்தால் அதற்கு எதிராகவும் வாதாடுவாரா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகன்றனர். மேலும் இந்த வழக்கில், மருத்துவமனை மற்றும் மேற்குவங்க அரசு சார்பில் எந்தவொரு வழக்கறிஞரும் வாதாட முன்வரக்கூடாது என்று பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், பில்கிஸ் பானுவுக்காக  குரல் கொடுத்த எதிர்க்கட்சிகள், பெண் எம்.பி.க்கள், பெண்ணுரிமைவாதிகள் கொல்கத்தா கொடூர சம்பவத்துக்கு வாய் திறக்காமல் மவுனம் காப்பதும் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கி உள்ளது.
இந்த நிலையில், வழக்கை விசாரத்த இன்று விசாரித்த உச்சநீதி மன்ற நீதிபதிகள், பல்வேறு கருத்துக்களை முன்வைத்ததுடன் , மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, 10 மருத்துவர்கள் கொண்ட தேசிய அளவில் ஒரு குழுவை அமைப்பதாகவும், அவர்கள் நாடு முழுவதும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளைப் பரிந்துரைப்பார்கள் என்று தெரிவித்தனர்.
அதன்படி, மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பு தொடர்பாக தேசிய அளவில் ஒருமித்த கருத்து உருவாக்க குழுவை நியமித்த நீதிபதிகள், அக்குழுவின் அதிகாரப்பூர்வ உறுப்பினர்களின் பட்டியலையும் வெளியிட்டனர்.
இந்த குழுவில்,  இந்திய அரசின் அமைச்சரவை செயலாளர், இந்திய அரசின் உள்துறை செயலாளர், மத்திய சுகாதார அமைச்சக செயலாளர், தேசிய மருத்துவ ஆணைய தலைவர், தேசிய தேர்வாளர்கள் குழு தலைவர் ஆகியோர் இக்குழுவின் அதிகாரப்பூர்வ உறுப்பினர்கள் ஆவர்.

இவர்கள் தவிர, அறுவை சிகிச்சை நிபுணர் வைஸ் அட்மிரல் ஆர்.சரின், டாக்டர் எம்.ஸ்ரீனிவாஸ், டாக்டர் டி .நாகேஷ்வர் ரெட்டி, டாக்டர் பிரதிமா மூர்த்தி, டாக்டர் கோவர்தன் தத் பூரி, டாக்டர் சௌமித்ரா ராவத், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இதய சிகிச்சை பிரிவு தலைவர் பேராசிரியை அனிதா சக்சேனா, மும்பை கிராண்ட் மருத்துவ கல்லூரி தலைவர் பேராசிரியர் பல்லவி சப்ரே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நரம்பியல் துறை தலைவர் டாக்டர் பத்மா ஸ்ரீவஸ்தவா ஆகியோரும் இக்குழுவின் அதிகாரப்பூர்வ உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.