
பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசனின் நேற்றைய லீக் போட்டியில், கோவா அணியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தியது கொல்கத்தா.
முதல் பாதி ஆட்டத்தில், கிடைத்த கோல் வாய்ப்புகளை இரு அணிகளும் வீணடித்தன. இதனால், முதல் பாதி ஆட்டம் கோல்கள் எதுவுமின்றி முடிந்தது.
அதன்பிறகு, 56வது நிமிடத்தில் கோவா அணியின் கோல் முயற்சியை, கொல்கத்தாவின் கோல் கீப்பர் திறமையாக முறியடித்தார். அதன்பிறகு, 85வது நிமிடத்தில், கொல்கத்தா அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பில், அந்த அணியின் ராய் கிருஷ்ணா ஒரு கோலடித்து, தனது அணிக்கு முன்னிலைப் பெற்று கொடுத்தார்.
ஆனால், இதற்கு, கோவா அணியால் குறைந்த நேரத்தில் பதிலடி கொடுக்க முடியவில்லை. இதனால், இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் கொல்கத்தா வென்று, இத்தொடரில் தனது நான்காவது வெற்றியை ஈட்டியது.