புனே:
மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ஆட்டத்தில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது கொல்கத்தா அணி. இதனால், முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட்டுகளுக்கு 161 ரன்களை எடுத்தது. அதனைத்தொடர்ந்து, 162 ரன்களை இலக்காக கொண்டு கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது, 16 ஓவர்கள் முடிவில், 162 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் லக்னோ – டெல்லி அணிகள் மோத உள்ளன.