கொல்கத்தா:  பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும்  என பிரதமர் மோடிக்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா கடிதம் எழுதி உள்ளார்.

கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கி இருக்கும் சூழலில் பாலியல் குற்றங்களை தடுக்க தண்டனை சட்டத்தைக் கடுமையாக்கக் கோரி பிரதமர் மோடிக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். இது வேலிக்கு ஓணான் பாதுகாப்பு என் பழமொழியை  நினைவுபடுத்து கிறது.

இந்தியாவிலேயே அதிக அளவிலான பாலியல் வன்முறைகள் நடைபெறும் மாநிலமாக பெண் முதல்வரான மமதை கொண்ட மம்தா பானர்ஜி ஆட்சி செய்து வரும் மாநிலமான மேற்குவங்கம் திகழ்கிறது. அங்கு அவரது கட்சி குண்டர்களால், எதிர்ப்பவர்கள் கடுமையாக தாக்கப்படும் சம்பவங்களும், காவல்துறையினர் முன்னிலையே கொலைகள் நடைபெறும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு ஊரில் உள்ள அனைத்து பெண்களுமேக பாலியல் வக்கொடுமை செய்யப்பட்ட அவலம் நிகழ்ந்துள்ளது. அதாவது, மேற்குவங்க மாநிலம்  சந்தேஷ்காலி பகுதி பெண்களை அந்த பகுதியைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குண்டர்கள் வலுக்கட்டாயக இழுத்துச்சென்று பாலியல் வன்புணர்வு செய்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து,   சில திரிணாமுல் தலைவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை வாபஸ் பெறுமாறு கூறியதாக சந்தேஷ்காலியில் உள்ள பெண் ஒருவர் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோவில் குற்றம் சாட்டினார். காவல்நிலையத்தில் புகார் அளித்ததாகக் கூறிய அவர், அங்கு விட்டுச் செல்வதற்கு முன்பு ஒரு குளத்தின் அருகே வாயைக் கட்டி இழுத்துச் சென்றதைக் குறிப்பிட்டுள்ளார்.  இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, இந்த  பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளில் ஒரு சதவீதம் கூட உண்மை என்று கண்டறியப்பட்டால் அது “மிகவும் வெட்கக்கேடானது” என்று கூறிய கல்கத்தா உயர் நீதிமன்றம், பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்ற மேற்கு வங்கத்தின் பிம்பம் வீழ்ச்சியடையும் என்று கடுமையாக விமர்சித்தது.

இந்த நிலையில், தற்போது  கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் கடந்த 9 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இதுபோன்  பெண்களுக்கு எதிரான  வழக்குகளில் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டிய பெண் முதல்வரான மம்தா, அதை கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறார். வாக்கு வங்கிக்காக மக்களை ஜாதி, மதத்தால் பிரித்து குளிர்காய்ந்து வருகிறார். இதனால், இவர் ஒரு பெண்ணா அல்லது அரக்கியா என்றும், இவரது மமதைக்கு விரைவில் அடி கிடைக்கும் என்றும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும்  என பிரதமர் மோடிக்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா கடிதம் எழுதி உள்ளார்.  இநத் கடிதத்தின் நகலை, த்திரிகையாளா் சந்திப்பில் அந்தக் கடிதத்தை மாநில முதல்வரின் தலைமை ஆலோசகா் அலப்பன் பந்தோபாத்யாய வெளியிட்டாா்.

‘நாட்டில் பாலியல் வன்கொடுமை தொடா் சம்பவமாக மாறியுள்ளது. தினசரி 90 பாலியல் வழக்குகள் பதிவாவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பல வழக்குகளில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனா். ;இந்த போக்கு திகிலூட்டுகிறது. சமூகம் மற்றும் தேசத்தின் மனசாட்சியை உலுக்கி தன்னம்பிக்கையைக் குலைக்கிறது.  இந்த போக்கு சமூகம் மற்றும் தேசத்தின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்துவிடும். இத்தகைய நிலையை முடிவுக்குக் கொண்டுவருவதோடு, பெண்களிடையே பாதுகாப்பான உணா்வை ஏற்படுத்துவதும் நமது கடமை.

இத்தகைய கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது நமது கடமை. அப்படிச் செய்தால் மட்டுமே பெண்கள் பாதுகாப்பாக உணர்வார்கள். இத்தகைய தீவிரமான, நுண்ணுணர்வு சார்ந்த சிக்கலுக்குத் தீர்வு காண சட்டத்தின் மூலம் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டால் அன்றி குற்றவாளிகளுக்குப் பாடம் புகட்ட முடியாது.

எனவே, இதுபோன்ற கொடூர குற்றங்களில் ஈடுபடுபவா்களுக்கு அதிகபட்ச தண்டனையை வழங்கும் வகையில் கடுமையான மத்திய சட்டத்தை உருவாக்க வேண்டும்.

மேலும்,  இதற்கு முதல்கட்டமாக பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். அவற்றில் 15 நாட்களுக்குள் வழக்கு விசாரணை முடிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார்.