கொல்கத்தா:
கேபிள் டிவி புதிய கட்டண உயர்வுக்கு கொல்கத்தா உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது.
நாளை முதல் புதிய கட்டண உயர்வு அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், புதிய கேபிள் டிவி கட்டணதுக்கு பிப்.18-ம் தேதி வரை தடை விதித்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பிப்.13-ம் தேதிக்குள் டிராய் பதிலளிக்கவும் ஆணையிட்டுள்ளது.
நாடு முழுவதும் கேபிள்ட டிவி கட்டணம் டிசம்பர் 29ந்தேதி முதல் உயர்வதாக டிராய் அறிவித்திருந்தது. இதை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டதை தொடர்ந்து, மேலும் 1 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக டிராய் அறிவித்து உள்ளது.
‘தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தொலைக் காட்சி பார்க்கும் ஒவ்வொரு வாடிக்கையாள ருக்கும் நெட்வொர்க் கெபாசிடி கட்டணமாக 130 ரூபாய் உடன் 18 சதவிகித ஜிஎஸ்டி வரியான 23 ரூபாய் 40 பைசாவுடன் சேர்த்து மொத்தம் 153 ரூபாய் 40 பைசா செலுத்த வேண்டும் என்றும், இத்துடன், கட்டணச் சேனல்களுக்கு தனியாக பணம் செலுத்த வேண்டும் எனவும் அறிவித்து இருந்தது.
இது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், கேபிள் ஆபரேட்டர்களும் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர். இது தொடர்பாக வழக்குகளும் தொடரப்பட்டுஉள்ளன.
இந்த நிலையில், சேனல்களுக்கு தனி தனிக் கட்டணம் வசூலிப்பதில் நடைமுறை சிக்கல் எழுந்துள்ளதால், அதற்கான அவகாசத்தை ஒரு மாதம் நீட்டிப்பதாக டிராய் அறிவித்து ஜனவரி 30ந்தேதி வரை கால அவகாசம் வழங்கியது.
இதுதொடர்பாக கொல்கத்தா மாநிலத்தை சேர்ந்த 80 கேபிள் டி.வி. ஆபரேட்டர் கள் கொல்கத்தா உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, புதிய கேபிள் டிவி கட்டண உயர்வுக்கு பிப்.18-ம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாகவும், இதுகுறித்து பிப்.13-ம் தேதிக்குள் டிராய் பதிலளிக்க உத்தரவிட்டும் வழக்கை ஒத்தி வைத்தது.