டெல்லி: மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. மேலும், பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் உடல் தகனம் செய்யப்பட்ட பிறகே எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக சிபிஐ  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பெண் முதல்வர் மம்தா பானர்ஜி ஆட்சி செய்து வரும் மேற்கு மாநிலத்தில் பயிற்சி பெண் மருத்துவர் ஓரு கும்பலால் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதை கண்டித்து மருத்துவர்கள் இன்றுவரை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இன்றைய விசாரணையின்போது, உச்ச நீதி மன்றத்தில் சிபிஐ விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது. அதில்,  சம்பவம் நடந்து 5-வது நாள் விசாரணைக்காக சென்றபோது குற்றம் நடந்த இடம் மாற்றப்பட்டிருந்தது. பயிற்சி மருத்துவரின் உடல் தகனம் செய்யப்பட்ட பிறகே எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பது உள்பட பல குற்றச்சாட்டுக்கள் சாட்டப்பட்டு உள்ளது.

இன்றைய விசாரணையின்போது,   மருத்துவர்களின் போராட்டத்தால் மக்கள் பாதிக்கப்படுவதை கவனிக்காமல் இருக்க முடியாது என்று கூறிய நீதிபதகள்,  மருத்துவர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும்; மருத்துவர்கள் பணிக்கு திரும்பாவிடில் அவர்கள் விடுப்பு எடுத்தவர்களாகத்தான் கருதப்படுவர் என்று கூறியதுடன், அவர்கள்  வருகைப்பதிவு அளிக்க வேண்டும் என எங்களால் கூறமுடியாது என தெரிவித்துள்ளது.