டெல்லி: பெண் முதல்வர் மம்தா ஆட்சி செய்து வரும் மேற்குவங்க மாநிலத்தில் பெண் மருத்துவர் ஒருவர் கொடுமையாக முறையில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் வலியுறுத்தி  பத்ம விருது பெற்ற 71 மருத்துவர்கள்  பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

சுகாதாரப் பணியாளர்களுக்கு எதிரான வன்முறையைக் கையாள்வதற்கான சிறப்புச் சட்டத்தை விரைவாக இயற்ற வேண்டும் என்றும், மருத்துவ வசதிகளில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகளை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரி பத்ம விருது பெற்ற 70 மருத்துவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும்  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.   கடந்த  ஆகஸ்ட் 8ந்தேதி அன்று அன்று இரவு ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள செமினார் ஹாலில் இந்த கொடூரம் ஒரு கும்பலால் அரங்கேற்றப்பட்டுள்ளது. அவரது உடல் நிர்வாண நிலையில் உடல் முழுவதும் ரத்தக்காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது.

அவரது பிரேத  பரிசோதனை அறிக்கையில், அந்த இளம் பெண் மருத்துவரின் கண்கள், வாய் மற்றும் பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் கசிந்தது தெரியவந்தது. கொடுமையான முறையில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு அவர்  கொடூரமாக கொல்லப்பட்டது தெரியவந்தது மேலும்,  இறந்த மருத்துவரின் உடலில் 150 மி.கி உயிரணு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்பது இந்தக் குற்றச் செயலில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதைக் குறிக்கிறது என்று உயிரிழந்த மருத்துவரின் பெற்றோர், நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில், நீதி கேட்டு மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். நாடு முகழுவதும் கடந்த 10 நாட்களாக போராட்டம் தொடர்ந்து வருகிறது.  மேலும், இந்த கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில் சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கொடூர சம்பவத்தில்  மருத்துவ ஊழியர் சஞ்சய் சிங் என்ற ஒருவரை மட்டுமே மாநில காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் சம்பவம் இடைபெற்ற பகுதி இடிக்கப்பட்டு, மாற்றம் செய்யப்பட்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் மேற்குவங்க மாநில அரசின் மனிதாபிமற்ற நடவடிக்கைகளை கண்டித்தும், மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் வலியுறுத்தி  பத்ம விருதுகள் பெற்ற 71 மருத்துவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

அந்த கடிதத்தில்,   ‘கொல்கத்தா பாலியல் வன்கொடுமை, கொலை சம்பவம் நாட்டில் பெண்கள் மற்றும் மருத்துவர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க உடனடி நடவடிக்கை தேவை என்பதையே காட்டுகிறது. நமது நாட்டின் தலைவர் என்ற அடிப்படையில், தனிப்பட்ட முறையில் இந்த விவகாரத்தில் தலையிட்டு துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.  மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒன்றிய, மாநில அரசுகளால் தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனர்.

பெண் மருத்துவர் பாலியல் கொலை: தான் முதல்வராக உள்ள மாநிலத்தின் சட்டம் ஒழுங்குக்கு எதிராக பேரணி நடத்துகிறாராம் மம்தா…