டெல்லி: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி பெண் குழந்தைக்கு தந்தையார். இதை அவர் மகிழ்ச்சியுடன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்திய அணி கேப்டன் விராட் கோலி-அனுஷ்கா ஷர்மா தம்பதிகளுக்கு கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 11ந்தேதி திருமணம் நடைபெற்றது. அனுஷ்கா சர்மா பிரபல பாலிவுட் நடிகையாக இருந்தார். இருவருக்கும் இடையே வெகு நாட்களாக காதல் தொடர்ந்து வந்தது. அதைத்தொடர்ந்தே அவர்களது திருமணம் நடைபெற்றது.
இத்தாலியில் உள்ள இத்தாலி நாட்டின் டஸ்கனி பிராந்தியத்தில் உள்ள புகழ்பெற்ற போர்கோ பினோசிட்டோ ரிசார்ட்டில் விராட் கோலி-அனுஷ்கா திருமணம் இருவரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

திருமணமாகி 3 ஆண்டுகள் முடிவடைந்து உள்ளன. இந்த நிலையில், கருவுற்றிருந்த அனுஷ்கா சர்மா இன்று மதியம் ஒரு அழகான பெண்குழந்தையை பெற்றெடுத்துள்ளார். தாயும் குழந்தையும் நலமுடன் உள்ளனர் என்ற தகவலை விராட் கோலி தனது டிவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
Patrikai.com official YouTube Channel