வீட்டு உரிமையாளர் இயர்போன் கேபிளை கட் செய்த பூனைக்குட்டி அதற்கு பதிலாக பாம்பின் குட்டியை எடுத்து வந்து கொடுத்த நிகழ்வு நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து கூறிய அந்த பூனைக்குட்டியை வளர்க்கும் வீட்டின் உரிமையாளர் ஹர்யான்டோ, பூனைக்குட்டி தனது மொபைல் போனின் இயர்போனை வைத்து விளையாடி தனது படுக்கையின் மீது விளையாடி வந்ததாகவும், அப்போது அதன் கேபிள் அறுந்து இரண்டு துண்டானது என்று கூறி உள்ளார்.
இதன் காரணமாக தான் அந்த பூனைக்குட்டியை கடிந்துகொண்டதாகவும், அதனால் வேகமாக வீட்டை வெளியே ஓடிய பூனைக்குட்டி, அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் சிறிய பாம்புக்குட்டியுடன் அறுந்துபோன கேபிளுக்கு பதிலாக எடுத்து வந்து போட்டதாக தெரிவித்து உள்ளார்.
இதைக்கண்ட என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை என்று தெரிவித்து உள்ளார்.
குட்டிப்பூனையின் இந்த நடவடிக்கை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.