புதுச்சேரி:

புதுச்சேரி அரசில் வாட்ஸ் அப் செயல்பாடை ரத்து செய்த முதல்வர் நாராயணசாமியின் உத்தரவை ரத்து செய்தார் கிரண்பேடி.

கவர்னர் கிரண்பேடி அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக வாட்ஸ்-அப் குரூப் தொடங்கி இருந்தார். இந்த வாட்ஸ்-அப்பில் கூட்டுறவு பதிவாளர் ஆபாச படம் அனுப்பியதால் சர்ச்சை ஏற்பட்டது.

இதையடுத்து இனி அதிகாரிகள் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளம் மூலம் அரசு தகவல்களை அனுப்ப கூடாது என்று முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டார்.
இதன் பேரில் அரசு கீழ்நிலை செயலாளர் கண்ணன் அனைத்து அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பினார்.

அதில் இனி சமூக வலைத்தளம் மூலம் அதிகாரிகள் அரசு சம்பந்தப்பட்ட தகவல்களை பரிமாறக் கூடாது என கூறப்பட்டு இருந்தது. இதன் மூலம் கிரண்பேடி உருவாக்கி இருந்த வாட்ஸ்-அப் செயல்பாடு நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் கீழ்நிலை செயலாளர் கண்ணன் பிறப்பித்த சுற்றறிக்கை இன்று கிரண்பேடி ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். அதனால் வாட்ஸ்- அப் செயல்பாடு தொடரும் என கூறப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]