புதுச்சேரி:

பிரதமர் நரேந்திர மோடியின் தாய் நடனம் ஆடி தீபாவளி கொண்டாடுவதாக கூறி ஒரு வீடியோவை புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

‘‘இந்த வீடியோவில் இருப்பது நம் பிரதமரின் 97 வயது தாயார். முதிர் வயதிலும் உற்சாகமாக நடனம் ஆடி தீபாவளியை கொண்டாடினார்’’ என்று கிரண்பேடி புகழ்ந்திருந்தார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. தற்போது மோடியின் தாய் ஹிராமென் மோடி நடனமாடுவது போன்ற வீடியோ போலி என்பது தெரியவந்துள்ளது. வீடியோவில் உள்ள மூதாட்டி மோடியின் தாயார் இல்லை என்பதும் தற்போது தெரியவந்துள்ளது. தற்போது இந்த தகவலும் ஆன்லைனில் வைரலாகி வருகிறது.

[youtube-feed feed=1]