டில்லி
புதுவை துணை நிலை ஆளுநரின் பேத்தி வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.
புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி. இவரது மகள் சைனா பேடி. இவரது கணவருடன் ஏற்பட்ட மனத் தாங்கலால் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். கிரண் பேடியின் பேத்தி தந்தையுடன் வசித்து வருகிறார். அந்தப் பெண்ணை அவர் தந்தையிடம் இருந்து பிரிக்க கிரண் பேடி முயன்றதாக கூறப்படுகிறது.
மெகபூனிஷா என்னும் அந்த சிறுமி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் மெகபூனிஷா, “எனது பெயர் மெகபூன்ஷா. நான் கிரண் பேடியின் ஒரே பேத்தி. என்னை யாரும் கடத்தவில்லை நான் எனது அப்பாவுடன் இருக்கிறேன். இதோ எனது அப்பாவும் இருக்கிறார். பாருங்கள். என் அப்பாவுடன் தான் இருக்கிறேன்.
தேவையற்ற குழப்பங்களை யாரும் செய்ய வேண்டாம். நான் என் தந்தையுடன் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன், என்னை யாரும் துன்புறுத்தவில்லை. அம்மா, நீங்கள் நடந்துக் கொண்டது சரியில்லாததால் நானும் அப்பாவும் இனி உங்களுடன் வசிக்க விரும்பவில்லை. நாங்கள் இனியும் உங்களுடன் சேர்ந்திருக்க மாட்டோம்.
நான் உங்கள் மகள் என்பதில் அவமானமாக உணர்கிறேன். அது மட்டும் அல்ல கிரண் பேடியின் பேத்தி என சொல்லிக் கொள்ளவும் வெட்கப்படுகிறேன். கிரண் நானி, (கிரண் பாட்டி). உங்கள் சொந்த மகளின் நலனில் உங்களுக்கு ஏன் அக்கறை இல்லை? காரணமே இல்லாமல் அம்மா அப்பாவுடன் சண்டையிடுவதை ஏன் தடுக்கவில்லை?
என்னுடைய அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையில் பல முறை அடிதடி சண்டைகள் கூட வந்துள்ளன. அம்மா செருப்பை கூட அப்பா மீது வீசி உள்ளார். அப்போதெல்லாம் அந்த பிரச்னையில் தலையிட மாட்டேன் என சொன்ன நீங்கள் இப்போது ஏன் அதையே செய்கிறீர்கள்? இப்போது மிகவும் தாமதம் என்பது உங்களுக்கு தெரியாதா?
மீண்டும் சொல்கிறேன். நீங்கள் நினைப்பது போல் என்னை யாரும் கடத்தவில்லை. இனியும் அப்பாவை காவல்துறையைக் கொண்டு மிரட்ட வேண்டாம். இந்த விவகாரத்தில் எனது தந்தைக்கு ஆதரவு அளிக்க விரும்பினால் உங்கள் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்” என கூறி உள்ளார்.
[youtube https://www.youtube.com/watch?v=3GCoUXpco6E?feature=youtu]
இந்த வீடியோவுக்கு கிரண் பேடி பின்னூட்டம் அளித்துள்ளார்.
அதில் அவர், “குழந்தையான என் பேத்தி கூறியவற்றை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொண்டு இதற்குப் பதிலளிக்க நான் விரும்பவில்லை. என்றும் அவள் என் பேத்திதான். என் மகளுக்கு அவளுடைய கணவனின் தந்திரமான செயல்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் முழு உரிமை உள்ளது. நான் என் மகளை நான் எப்படி ஆதரிப்பதைப் போல் ஆதரவு அவளது மகளுக்கும் தேவை.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கு குடும்பநல நீதிமன்றத்தில் இருப்பதால் தீர்ப்புக்காக நம்பிக்கையோடு காத்துக்கொண்டிருக்கிறேன். காவல்துறையினர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இதுகுறித்து விசாரித்து ஆய்வு செய்யலாம்.
அந்த பெண்ணின் தந்தை இந்த வீடியோ பதிவைப் பற்றி ஒன்றும் தெரியாததைப் போல அவளது முன் உட்கார்ந்துகொண்டு இருக்கும் தந்திரச் செயல்களை நிறுத்த வேண்டும்.
அந்த வீடியோ பதிவை நீக்கும்படி நீதிமன்றம் அவளிடம் கேட்டுக்கொண்டிருப்பதோடு வழக்கறிஞர் மூலம் இது தொடர்பான நோட்டீஸையும் யூடியூபில் வெளியிடும்படி கூறி உள்ள்ளது. தற்போதைய நிலவரம் இது தான்.”என தெரிவித்துள்ளார்.