புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரன்பேடி, அதிகாரிகளுடன் எளிதில் தொடர்புகொள்ள வசதியாக, வாட்ஸ் அப் குழு ஒன்றை நிர்வகித்து வருகிறார். இந்த குழுவில் புதுச்சேரி ஐஏஎஸ் ,ஐபிஎஸ் அதிகாரிகள் உறுப்பினராக உள்ளனர்.
இவர்களில் ஏ.எஸ். சிவக்குமாரும் ஒருவர். இவர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக பணியாற்றுகிறார். இவர் தனது அலைபேசியில் இருந்து ஆபாச படங்களை கிரண்பேடியின் வாட்ஸ் அப் குழுவுக்கு அனுப்பியுள்ளார்.
இதைக் கண்டு அந்த வாட்ஸ் அப் குழ்வின் அட்மினாக இருக்கும் ஐஏஎஸ் பெண் அதிகாரி அம்ரிதா பேல் அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி கிரண்பேடிக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து அம்ரிதா ரிதா பேலை, காவல்துறையில் புகார் அளிக்க சொன்னார். இதையடுத்து டிஜிபி எஸ்.கே கவுதமிடம் வாட்ஸ் அட்மின் அம்ரிதா பேல் புகார் அளிக்க, உடனிடாயக சிவகுமார் போலீசாரால் தலைமை அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டார். . சிவகுமாரை கிரண்பேடி உடனடியாக சஸ்பெண்ட் செய்தார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிட்டார்.
இதற்கிடையே இந்த பிரச்சினை, அரசியல் விவகாரமாக கிளம்பியுள்ளது. முதல்வரிடம் ஆலோசனை செய்யாமல் கிரண்பேடி தன்னிச்சையாக செயல்படுவதாகவும், மத்திய அரசு உடனடியாக கிரண்பேடியை திரும்ப பெற வேண்டும் என்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கந்தசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தெரிவித்துள்ளார்.