இங்கிலாந்து மன்னர் சார்லஸ் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியை இன்று சந்தித்துப் பேசினார். ரோமின் புறநகர்ப் பகுதியில் உள்ள மெலோனியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
மன்னர் தனது 20வது திருமண ஆண்டு விழாவின் காலைப் பொழுதை இத்தாலிய பிரதமருடன் வில்லா டோரியா பாம்பிலியில் கழித்தார், அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டு, இராணுவ குதிரைப்படையிலிருந்து வரவழைக்கப்பட்ட காவலர்களின் அணிவகுப்பை பார்வையிட அழைத்துச் செல்லப்பட்டார்.

மன்னர் சார்லஸ் இத்தாலி பிரதமர் மெலோனியைச் சந்திப்பது இதுவே முதல் முறை என்றபோதும் ஒருவரையொருவர் அன்புடன் வரவேற்று, சிரித்து மற்றும் சைகை செய்து மகிழ்ச்சியுடன் குலாவினர்.
17 ஆம் நூற்றாண்டின் அரண்மனையின் தோட்டங்களைச் சுற்றிப் பார்த்தபோது, அங்கிருந்த நீரூற்று அருகே அமர்ந்து தங்கள் உரையாடலைத் தொடர்ந்தனர்.
கேசினோ டெல் பெல் ரெஸ்பிரோவின் நுழைவாயிலில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்ட இவர்கள் பின்னர் பின்னால் உள்ள பெரிய அழகுபடுத்தப்பட்ட தோட்டங்களுக்குச் சென்றனர்.
மூன்றுநாள் அரசுமுறை பயணமாக ராணி கமீலா உடன் இத்தாலி வந்துள்ள பிரிட்டன் மன்னர் சார்லஸ் நாளை இத்தாலி நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார். இத்தாலி நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதல் பிரிட்டிஷ் மன்னர் சார்லஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ராணி கமீலா வாசிப்பு ஆர்வத்தை ஊக்குவிக்கும் ஒரு நிகழ்விற்காக உள்ளூர் அரசுப் பள்ளியான இஸ்டிடுடோ காம்ப்ரென்சிவோ அலெஸாண்ட்ரோ மன்சோனிக்குச் சென்றிருந்தார்.
இத்தாலி நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு முன் மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமீலா இருவரும் சேர்ந்து செனட் தலைவர்களை சந்திக்க உள்ளனர்.
[youtube-feed feed=1]