இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது மனைவி கமில்லா உடன் பெங்களூருக்கு ரகசிய விஜயம் மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வேல்ஸ் இளவரசராக பலமுறை இந்தியா வந்துள்ள மன்னர் சார்லஸ் 2023ம் ஆண்டு பிரிட்டன் மன்னராக முடிசூட்டப்பட்ட பிறகு முதல்முறையாக பெங்களூருக்கு ‘ரகசியப் பயணம்’ மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

75 வயதான சார்லஸ், தனது இந்த நான்கு நாள் ‘சூப்பர் பிரைவேட்’ பயணத்தின் போது பெங்களூரில் உள்ள ஆரோக்ய மற்றும் புத்துணர்ச்சி முகாமில் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

அக்டோபர் 21-26 வரை 2024 காமன்வெல்த் அரசாங்கத் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட மன்னர் சார்லஸ் சமோவாவில் இருந்து இந்தியா வந்ததாகத் தெரிகிறது.

அக்டோபர் 27 அன்று பெங்களூரு வந்த அவரின் தனிப்பட்ட ஜெட் சனிக்கிழமை இரவு HAL விமான நிலையத்தில் தரையிறங்கியதாகவும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் ஒயிட்ஃபீல்டில் பகுதியில் உள்ள பிரபல ‘புத்துணர்ச்சி’ மையத்தில் ஓய்வு எடுப்பதாகவும் TOI தெரிவித்துள்ளது.

பெங்களூரில் தங்கியிருக்கும் நாட்களில், அரச தம்பதியினர் காலை யோகா மற்றும் ஓய்வு மற்றும் புத்துணர்ச்சிக்காக வடிவமைக்கப்பட்ட பல்வேறு ஆரோக்கிய சிகிச்சைகளில் ஈடுபட்டுள்ளனர்.