இடுக்கி: 4ம் வகுப்பு படித்து வந்த பெண் குழந்தையின் தொண்டையில் ‘நூடுல்ஸ்’ சிக்கி உயிரிழந்த சம்பவம் கேரள மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. இது பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள அடிமாலியில் பகுதியில் வசித்து வரும் ஒரு கும்பத்தினர், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது குழந்தைக்கு நூடுல்ஸ் செய்து கொடுத்துள்ளனர். அதை 3வது வகுப்பு படித்து வந்த சுமார் எட்டு வயது சிறுமி ஜியன்னா சோஜன் சாப்பிட்டுக்கொண்டி ருந்தார். அப்போது அவரத தொண்டையில் எதிர்பாராதவிதமாக நூடுல்ஸ் சிக்கியது. இதனால், மூச்சுவி சிரமப்பட்டார். இதையடுத்து, அவரது பெற்றோர்கள் அடிமாலியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால், போகும் வழியிலேயே அவரது உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நூடுல்சால் சிறுமி உயிரிழந்த சம்பவம் அந்த குழந்தை படித்து வந்த கூம்பன்பாறை பாத்திமா மாதா பள்ளியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பெற்றோர்கள் நூடுல்ஸ் போன்ற துரித உணவுகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இன்றைய நவீன யுகத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாஸ்ட் புட் எனப்படும் துரித உணவுகள், நூடுல்ஸ், பர்கர், பிஸ்ஸா, பிராய்லர் சிக்கன், பிரைடு சிக்கன் போன்ற உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவுகளையே அதிகம் விரும்பி உண்கின்றனர். இதனால், புதுபுதுக் நோய்களும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. இதனால் சிறுவர்கள், சிறுமிகள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகி வருகின்றனர். இதை தடுக்க மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தினாலும் அதை கேட்கும் மனநிலையில் இன்றைய தலைமுறையினர் இல்லை என்பதே நிதர்சனம்.
இந்த நிலையில்தான், நூடுல்ஸ் சாப்பிட்டு குழந்தை உயிரிழந்த சம்பவம் கேரள மாநில மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்திஉள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவுகளில் நூடுல்ஸ்ம் முக்கியாக பங்கு வகிக்கிறது. அதுமட்டும் இல்லாமல் சமைப்பதற்கு எளிதாக இருப்பதால் பெற்றோர்களும், இதை உடனே வாங்கி சமைத்து விடுகின்றனர். மேலும் அதில் ருசிக்கக்காக சேர்க்கப்படும் ரசாயன பொருட்கள் அதை சாப்பிடுபவர்களுக்கு ருசியை கொடுப்பதால், குழந்தைகள் நூடுல்ஸ் சாப்பிடுவதையே அதிகம் விரும்புகின்றனர்.
இவ்வாறு நாம் சாப்பிடும் நூடுல்ஸில் நமக்கு தெரியாத தீமைகளும் உள்ளன. அந்த தீமைகள் என்ன மாதிரியான பிரச்சனையை நமது உடலுக்கு ஏற்படுத்துகிறது. அதாவது, நூடுல்ஸில் நார்ச்சத்துக்களும், புரோட்டீன்களும் மிக குறைவாக இருப்பதால் இது உடல் நலத்திற்கு தீங்கு விளைவைக்க கூடியது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நூடுல்ஸ் சாப்பிடும் போது ஒட்டாமல் தனி தனியாக பிரிந்து இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு சில நூடுல்ஸில் பாராஃபின் மெழுகு என்ற திடப்பொருள் கலந்து செய்யப்படுகின்றன. இது உடலுக்கு கேடு விளைப்பதாகும்.
நூடுல்ஸ் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்றது, ஏனெனில் அவை மூச்சுத் திணறலை ஏற்படுத்தும்.
மேலும், நூடுல்ஸ் பதப்படுத்தப்பட்ட உணவாக இருப்பதால் அதனை நாம் சாப்பிடும் போது உடல் எடை அதிகரிக்க செய்யும்.
நூடடுஸை தொடர்ந்து நாம் சாப்பிட்டால் உடலில் குமட்டல் மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகள் வரும்.
மேலும், இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்து சர்க்கரை நோய் வருவதற்கு காரணமாக இருக்கிறது.
நூடுல்ஸில் மைதா மாவும் கலந்து இருப்பதால் அதனை அதிகமாக சாப்பிட கூடாது.
கர்ப்பிணி பெண்கள் நூடுல்ஸை சாப்பிட கூடாது. ஏனென்றால் அது வயிற்றில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நல்லது கிடையாது.
இத்தகைய நூடுல்ஸை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது ஒரு கட்டத்திற்கு மேல் உடலில் மலசிக்கல் பிரச்சனையை வர செய்யும். மேலும் அது மலக்குடல் புற்றுநோயக மாறும் வாய்ப்பும் இருக்கிறது.
நூடுல்சில், சுவையை அதிகரிக்க MSG எனப்படும் ஒரு மூலப்பொருள் கலக்கப்படுகிறது. இந்த இரசாயனம் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு தீங்கு விளைவிக்கும், ஏனெனில் இது மூளை பாதிப்புக்கு வழிவகுக்கும். ஆனால், பல நிறுவனங்கள், தங்களது நூடுல்ஸில் MSG இல்லை என்று கூறி வருகிறது. அதனால், பெற்றோர்கள் நூடுல்ஸ் வாங்கும்போது, அதனுள் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் என்னென்ன என்பதை சரிபார்க்க வேண்டியது அவசியம்.
நூடுல்ஸில் ஏற்கனவே அதிக அளவு உப்பு உள்ளது, அவை நீண்ட காலத்திற்கு பாதுகாக்கப்படுகின்றன. சோடியம், உப்பில் உள்ள உறுப்பு, முக்கிய உறுப்புகளையும் நேரடியாக பாதிக்கிறது, இரைப்பை புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது, மேலும் அதிகமாக உட்கொள்ளும் போது சேதத்தை ஏற்படுத்தும்.
தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இருப்பது
இது தவிர, நூடுல்ஸை பேக்கேஜிங் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் பொருட்களில் பிளாஸ்டிசைசர்கள் மற்றும் டையாக்ஸின் போன்ற பல்வேறு இரசாயனங்கள் உள்ளன. இந்த இரசாயனங்கள் புற்றுநோயை உண்டாக்கும்
உடனடி நூடுல்ஸின் வழக்கமான நுகர்வு குழந்தைகளின் மோசமான உணவுப் பழக்கத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்கும், ஏனெனில் அவர்கள் சத்தான உணவுத் தேர்வுகளை விட வசதிக்காக முன்னுரிமை அளிக்கப் பழகலாம். இது அவர்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் நீண்ட கால வாழ்க்கைப் பழக்கவழக்கங் களுக்கு எதிர்மறையான முன்னுதாரணத்தை அமைக்கலாம்.
உடனடி நூடுல்ஸை தவறாமல் உட்கொள்வது காலப்போக்கில் குழந்தைகளின் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு பங்களிக்கும். அதிக சோடியம் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்பு உள்ளடக்கம் காரணமாக குழந்தைகளின் உறுப்பு ஆரோக்கியத்தில் நீண்டகால விளைவுகளை உண்டாகும்.
குழந்தைகளின், சிறந்த நீண்ட கால ஆரோக்கிய விளைவுகளுக்காக, குழந்தையின் உணவில் உடனடி நூடுல்ஸைக் கட்டுப்படுத்துவது அல்லது தவிர்ப்பது நல்லது. அதனால் நூடுல்ஸை அளவுக்கு அதிகமாக சாப்பிடாமல் இருப்பது நல்லது. முடிந்த வரை குழந்தைகளுக்கு நூடுல்ஸ் கொடுப்பதை தவிருங்கள்.
ஏற்கனவே இந்தியாவில் பிரபலமானநெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ்-க்கு தடை விதிக்கப்பட்டது நினைவிருக்கலாம். கடந்த 2015ம் அண்டு ஜுன் 6ந்தேதி மத்திய அரசு மேகி நூடுல்ஸ் நாடு முழுவதும் விற்பனை செய்ய காலவரையின்றி தடை விதித்தது. மேகியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட லெட்டின் அளவு அதிகமாக இருந்தால் அது மெல்ல கொல்லும் விஷமாக மாறக்கூடும். இதன் காரணமாக வயிற்று வலி, அதிக கோபம், தூக்கமின்மை, தலைவலி, மறதி நோய், ரத்த அழுத்தம், கிட்னி கோளாறு, சகிப்பு தன்மை இன்மை போன்ற பிரச்னைகள் ஏற்படும் என்றும், மேகி தயாரிப்பில் மனிதர்கள் சாப்பிட முடியாத அளவில் வேதிப்பொருள் கலந்திருப்பதாக கோரி உணவு பாதுகாப்பு அமைப்பு அதை தடை செய்தது. இதையடுத்து, மேகி நிறுவனம் சுமார் 650 டன் மதிப்பிலான மேகிகளை ஒழித்தது. இதனால் அந்நிறுவனத்திற்கு நஷ்டம் மட்டும் அல்லாமல், மக்கள் அந்நிறுவனத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை தகர்ந்தது.
பின்னர் அந்நிறுவனம் வேதிப்பொருட்களை குறைத்து, மீண்டும் இந்திய அரசிடம் அனுமதி பெற்று விற்பனை செய்து வருகிறது. ஆனால், அந்நிறுவனம் ஏற்கனவே உறுதி அளித்தபடிதான் வேதிப்பொருட்களை குறைத்து விற்பனை செய்கிறதா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது
இதனால், பெற்றோர்கள், தங்களது குழந்தைகளுக்கு நூடுல்ஸ் வாங்கிக்கொடுப்பதையும், அதை சமைத்து கொடுப்பதையும் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். குழந்தைகளின் மூளை வளர்ச்சி, முடி வளர்ச்சி என நிறுவனங்களின் விளம்பரங்களை பார்த்து, குழந்தைகளை நோயாளிகளாக உருவாக்கி விடாதீர்கள். ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான உணவுகளை வழங்கி, ஆரோக்கியமாக, நோய் நொடிகள் இன்றி குழந்தைகளை வளருங்கள்…குழந்தைகளின் எதிர்காலத்தை சிறந்ததாக உருவாக்கித் தரும் பெரிய பொறுப்பு பெற்றோர்களைச் சார்ந்தது என்பதை மறவாதீர்கள்.