சியோல்:

தென் கொரியாவும், வடகொரியாவும் பகைமை மறந்து இணைந்துள்ளன. கடந்த 27ம் தேதி இருநாட்டு தலைவர்கள் மத்தியில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளான இரு நாடுகளுக்கு இடையே நீடித்து வந்த பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.

முன்னதாக இரு நாடுகளின் பிரிவினையால் 2015ம் ஆண்டு வடகொரியாவின் நேரத்தை தென்கொரியாவின் நேரத்தை விட அரை மணி நேரம் குறைத்து கிம் ஜாங் மாற்றி அமைத்தார். தற்போது சுமூக தீர்வு ஏற்பட்டதை தொடர்ந்து மீண்டும் தென் கொரியா நேரத்திற்கே மாற்றி அமைக்க பேச்சுவார்த்தையின் போது கிம் ஜாங் சம்மதம் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தையின் நடந்த அறையில் இரு நாட்டு கடிகாரங்களும் வெவ்வேற நேரத்தை காட்டிக் கொண்டிருந்தன. இது பலருக்கு நெருடலை ஏற்படுத்தியது. பழைய நேரத்திற்கே மாற்றி அமைக்க வேண்டும் என்ற தென்கொரியா அதிபர் மூன் கோரிக்கையை கிம் ஜாங் ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.