சியோல்:
கொரிய நாடுகளுக்கு இடையே நீண்ட ஆண்டுகளாக நீடித்து வந்த போர் பதற்றம் கடந்த 27ம் தேதி நடந்த பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் போது அணு ஆயுதங்களை கைவிட வடகொரியா அதிபர் கிம் ஜாங் ஒப்புக் கொண்டுள்ளார்.
இது குறித்து தென்கொரியா அதிபர் மூன் கூறுகையில்,‘‘ அணு ஆயுதங்களை விலக்கி கொள்ள கிம் ஜாங் சம்மதம் தெரிவித்துள்ளார். எனினும் கொரியா போரை முடிவுக் கொண்டு வருவதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும். அதோடு படையெடுப்பு இருக்காது என்று அமெரிக்கா உறுதியளித்தால் இதற்கு சம்மதம் என்று கிம் ஜாங் தெரிவித்தார்’’ என்றார்.
இதற்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அமெரிக்கா மற்றும் தென் கொரியா வல்லுனர்கள், பத்திரிக்கையாளர்களை அழைத்துச் சென்று பூமிக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டுள்ள அணு ஆயுதங்கள் செயலிழக்க செய்வதையும், அவற்றை முடிவுக்கு கொண்டு வருதையும் நேரில் காட்டுவதாக கிம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கொரிய நாடுகள் இடையிலான சுமூக உறவு ஏற்பட்டிருப்பதை அமெரிக்க அதிபர் டிரம்ப் வரவேற்பு தெரிவித்திருந்தார்.