வடகொரியா:
ஆளும் கட்சியின் கூட்டத்தில் இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சியை பற்றி வடகொரிய தலைவர் கிம் ஜாங் உரையாற்றினார், இந்த கூட்டத்தில் பொருளாதார வளர்ச்சி பற்றி பல விவாதங்கள் நடைபெற்றது.
கட்சியின் எட்டாவது மத்திய குழுவின் இரண்டாவது பெரும் கூட்டம் நடைபெற்றது, பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான பணிகள் மற்றும் அவற்றை செயல்படுத்த பொருளாதார வழிகாட்டுதலுக்காக மாநில உறுப்புகளின் பங்கை மேம்படுத்த வேண்டும் என கிம் ஜாம் அழைப்பு விடுத்துள்ளார்.
பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கும், அதன் சுதந்திரத்தை பலப்படுத்துவதற்கும் புதுமையான மற்றும் நியாயமான திட்டங்களை பொருளாதாரத் துறை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
முழுமையான பொருளாதார சீரமைப்புக்கு கட்சி ஆதரவளிக்கும் என்பதை குறிப்பிட்டுள்ள கிம் ஜாங், இந்த ஆண்டின் பொருளாதார பணிகளை திட்டமிட்டுவதிலும், வழி நடத்துவதிலும் தங்களுடைய பொறுப்பையும் பங்கையும் முழுமையாக மேம்படுத்த வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.