பியோங்யாங்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சகோதரி, கிம் யோ ஜாங்கியிடம் அதிபர் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விவரத்தை தென்கொரிய மறைந்த முன்னாள் அதிபர் கிம் டே ஜங் உதவியாளர் சாங் சாங்மின் வெளியிட்டு இருக்கிறார். கிம் ஜாங் உன் கோமாவில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது, இதையடுத்து கிம் ஜாங் பொறுப்புகள் அனைத்தும் இளைய சகோதரியான கிம் யோஜாங்யிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதிபர் கிம்முக்கு சிக்கலான அறுவை சிகிச்சை நடைபெற, அதன் பிறகு அவா கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகின. உடல்நிலை குறித்து பல தகவல்கள் பரவிய நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் இருக்கிறாரா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
மொத்தமாக ஆட்சிப்பொறுப்பை ஒப்படைக்கும் ஒரு தெளிவான திட்டத்தை இதுவரை வடகொரியா உருவாக்கவில்லை. ஆட்சியில் வெற்றிடம் தென்பட கூடாது என்பதற்காக சகோதரி கிம் யோ ஜாங்குக்கு பொறுப்பு தரப்பட்டு உள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.