கொலை செய்யப்பட்ட சரத் தனது தாயாருடன்

பெங்களூர்,

ர்நாடகாவில் வருமான வரித்துறை அதிகாரியின் 19 வயது மகனை அவனது நண்பர்களே கடத்தி சென்று, கொலை செய்து எரித்த அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த கடத்தல் கொலை சம்பவத்தில் அவனது நண்பர்களே ஈடுபட்டிருப்பது தெரிய வந்ததுள்ளது.

பெங்களூரில் வருமானவரித்துறை அதிகாரியாக இருப்பவர் ஒருவரின் மகன் சரத் (வயது 19). புதிய பைக் வாங்கியதை தனது நண்பர்களிடம் காண்பிக்க சென்றவன் மாயமானான்.

இதுகுறித்து பல இடங்களில் அவனை தேடியும் கிடைக்காததால், அவன் காணாமல் போனது குறித்து போலீசில் புகார் கூறப்பட்டது.

இதற்கிடையில், சரத்தை கடத்திச் சென்ற கும்பல் 50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு வருமான வரித்துறை அதிகாரிக்கு போன் செய்து மிரட்டியது.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையல் இறங்கினர். இதை அறிந்த  கடத்தல் கும்பல், தாங்கள் பிடிபட்டுவிடுவோம் என்ற அச்சத்தால் மாணவன் சரத்குமாரை கொலை செய்து அவன் உடலை தீயிட்டுக் கொளுத்தி ஏரியில் வீசிச் சென்றனர்.

உடலை கைப்பற்றிய போலீசார், கடத்தல் கும்பலை சேர்ந்த 6 பேரை கைது செய்தனர். கடத்தல் கும்பல் சரத் வீட்டுக்கு அனுப்பியிருந்த வீடியோ பதிவை தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையில், சரத்தை கடத்தி பணம் கேட்டு மிரட்டியது, அவனது நண்பர்கள் என்பது தெரிய வந்துள்ளது. முதல் கட்டமாக சரத்தின்  நண்பன் விஷால் என்பர் உடந்தையாக இருந்தது தெரிய வந்துள்ளது.