0
குஷ்பு, மற்றும் விஜயதரணி ஆகியோர் மீது தேர்தல்விதிகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்களான குஷ்பு தமிழகம் முழுதும் தி.மு.க. – காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று குமரி மாவட்டத்தில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். உடன், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. விஜயதரணியும் கலந்துகொண்டார்.
குளித்துறையில் தேர்தல் பிரச்சாரம் செய்த இவர்கள் தேர்தல் விதிகளை மீறியதாக தேர்தல் பார்வையாளர்கள் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில்  காயக்காவிளை காவல்துறையினர் இருவர் மீதும் புகார் பதிவு செய்தனர்.