அகமதாபாத்: டி-20 போட்டிகளில், ஒரு கேப்டனாக அதிக அரைசதம் அடித்தவர் என்ற கேன் வில்லியம்சன் சாதனையை சமன் செய்துள்ளார் இந்திய கேப்டன் விராத் கோலி.

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் மூன்றாவது டி-20 போட்டிகளில், அடுத்தடுத்து அரைசதம் அடித்து நாட்அவுட்டாக இருந்தார் விராத் கோலி. இதன்மூலம், ஒரு கேப்டனாக தொடர்ந்து இரண்டுமுறை அரைசதம் அடித்தவர் மற்றும் டி-20 போட்டிகளில் அதிகமுறை அரைசதம் அடித்தவர் என்ற சாதனையை, நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனுடன் சமன் செய்துள்ளார் விராத் கோலி.

மேலும், டி-20 போட்டிகளில், மொத்தமாக அதிக ரன்களை(3078) அடித்த உலகின் ஒரே பேட்ஸ்மேன் என்ற சாதனையும் கோலியிடமே உள்ளது. அதாவது 3000 ரன்களைக் கடந்த ஒரே பேட்ஸ்மேன். இவர் 88 போட்டிகளில் இச்சாதனையை செய்துள்ளார்.

ஒரு கேப்டனாக, 41 இன்னிங்ஸ்களில் 11 அரைசதங்கள் அடித்துள்ளார் கோலி. கேன் வில்லியம்சன், 49 இன்னிங்ஸ்களில் 11 அரைசதங்கள் அடித்திருந்தார். கோலியின் அதிகபட்ச டி-20 ரன் 94.