சண்டிகர்:
ராகுல் டிராக்டர் பேரணிக்கு முதலில் மறுப்பு தெரிவித்த ஹரியானா அரசு, பின் 100 பேருடன் மட்டும் பேரணியை தொடர அனுமதி அளித்தது.

மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிராக, காங்., எம்.பி., ராகுல், கடந்த 3 நாட்களாக டிராக்டர் பேரணி நடத்தி வருகிறார். இன்று பிற்பகல் ஹரியானா எல்லைக்குள் நுழைந்த போது, ராகுலின் டிராக்டர் பேரணியை எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். 5 ஆயிரம் மணி நேரம் ஆனாலும், இந்த இடத்தை விட்டு நகரப் போவது இல்லை என ராகுல் தனது டுவிட்டரில் பதிவிட்டார்.

இதனையடுத்து, ராகுலின் டிராக்டர் பேரணிக்கு ஹரியானா மாநில அரசு அனுமதி அளித்தது. 100 பேருடன் மட்டும் டிராக்டர் பேரணியை தொடர அனுமதி அளிக்கப்பட்டது.