காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குலாம் நபி ஆசாத், நாடாளுமன்ற மேல்சபையில் எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். அவரது பதவிக்காலம் வரும் 15 ஆம் தேதியுடன் முடிகிறது.

காஷ்மீர் மாநில சட்டப்பேரவையில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர், ஆசாத்.

ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துள்ள மத்திய அரசு, அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்துள்ளது. அங்கு தேர்தல் நடந்தால் மட்டுமே ஆசாத், மீண்டும் எம்.பி. ஆகலாம்.

எனவே, குலாம் நபி ஆசாத்துக்கு பதிலாக புதிய எதிர்க்கட்சி தலைவர் நியமிக்கப்பட வேண்டும்.

மக்களவை காங்கிரஸ் முன்னாள் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மத்தியபிரதேச முன்னாள் முதல்-அமைச்சர் திக் விஜய் சிங் ஆகிய மூன்று பேர் பெயர்கள் காங்கிரஸ் மேலிடத்தால் பரிசீலிக்கப்பட்டன.

அநேகமாக மல்லிகார்ஜுன் கார்கே, ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் பொறுப்புக்கு நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

– பா. பாரதி