துவா

காஷ்மீரில் தேர்தல் பிரசாரம் செய்துக் கொண்டிருந்த போது காங்கிரஸ் தலைவர் கார்கே மயங்கி விழுந்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. தற்போது 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு காஷ்மீர் சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. கடைசியாக 2014ல் தான் சட்டசபைத் தேர்தல் நடந்தது. 2019ல் தேர்தல் நடக்கவில்லை.

ஏற்கனவே 2 கட்ட வாக்குப்பதிவு முடிந்து மூன்றாவது மற்றும் கடைசிக் கட்ட தேர்தல் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் அங்கு பல்வேறு தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இன்று காஷ்மீரில் காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே பிரசாரம் மேற்கொண்டார்.

அவர் காஷ்மீரில் உள்ள கதுவா என்ற பகுதியில் அவர் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டபோது மேடையில் அவர் பாஜகவை கடுமையாக விமர்சித்துப் பேசிக் கொண்டு இருந்தார். அவ்வாறு பேசிக் கொண்டு இருக்கும் போதே கார்கே திடீரென மயக்கம் அடைந்தார்.

தனது பேச்சை நிறுத்திக் கொண்ட கார்கே நிற்கவே சிரமப்படுவதைப் பார்த்த உடனேயே மேடையில் இருந்த மற்ற நிர்வாகிகள் ஓடிச் சென்று அவரை தாங்கிப் பிடித்தனர். தேர்தல். பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.