டெல்லி
காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே மோடி ஒரு நொடி கூட மணிப்பூருகாக செலவிடவிலை என கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்று காங்கிரஸ் கட்சியின் தேச்ய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எக்ஸ் தளத்தில்,
“மணிப்பூர் சூழல் பிரதமர் மோடியின் மோசமான தோல்வி; அதை மன்னிக்க முடியாது. கடந்த 16 மாதங்களில், மணிப்பூருக்காக ஒரு நொடி கூட பிரதமர் மோடி செலவிடவில்லை. மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை இன்னும் கட்டுக்கடங்காமல் தொடர்கிறது. பாஜக அரசுக்கு உடந்தையாக இருந்ததன் விளைவுகளை மக்கள் அனுபவிக்கிறார்கள்.
மணிப்பூர் மக்களின் குரலை எதிரொலித்த அம்மாநில முன்னாள் ஆளுநர் அனுசுயா உய்கே பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கோரினார். மணிப்பூர் முதல்வர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். மணிப்பூரில் பாதுகாப்புச் சூழலுக்கு மத்திய அரசு முழுப்பொறுப்பேற்க வேண்டும். மணிப்பூர் வன்முறையை விசாரிக்கும் சிபிஐ, என்ஐஏ மற்றும் பிற அமைப்புகளை மோடி அரசு தவறாகப் பயன்படுத்தக்கூடாது.
பிரதமரைப் போலவே, மத்திய உள்துறை அமைச்சரும் மணிப்பூரில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பை கைவிட்டதுபோல் தெரிகிறது. மணிப்பூரை தவிர மற்ற மாநிலங்களின் தேர்தல்களில் பேரணிகளில் கலந்துகொண்டு அரசியல் செய்வதில் பிரதமர் மோடி மும்முரமாக இருக்கிறார். எங்கள் மாநிலத்தில் நிலவும் வன்முறையை நிறுத்த பிரதமர் மோடி ஏன் விரும்பவில்லை? என மணிப்பூர் மக்கள் கேட்கிறார்கள்”
என்று பதிந்துள்ளார்.