ர்ரே நகர், கனடா

னடாவில் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகத்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் பஞ்சாப் மாநிலங்களை இணைத்து காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாடாக உருவாக்க வேண்டும் என்று சீக்கியர்களில் ஒரு பிரிவினர் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள்  இந்தியா மட்டுமன்றி கனடா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் காலிஸ்தான் பிரிவினையை வலியுறுத்தி போராட்டம், வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கனடாவின் சர்ரே நகரில் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்நாட்டு போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.  அவரை 2 மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை யார் சுட்டுக் கொன்றது, எதற்காகக் கொன்றனர் என்ற விவரங்கள் வெளியாகவில்லை.

கனடாவின் சர்ரே நகரில் சீக்கியர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். நகரின் குரு நானக் சீக்கிய குருத்வாராவின் தலைவராகவும் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுச் செயல்பட்டுக் கொண்டிருந்தார். காலிஸ்தான் தனி நாடு கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் ‘நீதிக்கான சீக்கியர் அமைப்பிலும் ஹர்தீப் சிங் தொடர்பு வைத்திருந்தார்.

இந்தியஉளவுத்துறைவட்டாரங்கள்

“பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள ஹர்சிங்பூரை பூர்வீகமாகக் கொண்டவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார். இவர் பாகிஸ்தானுக்கு கடந்த 2013 – 14-ம் ஆண்டுகளில் சென்று வந்துள்ளார். அங்கு காலிஸ்தான் டைகர் படையைச் சேர்ந்த ஜக்தர் சிங் தாரா என்பவரை சந்தித்து பேசியுள்ளார். கடந்த 2010-ம் ஆண்டு பஞ்சாபின் பாட்டியாலாவின் சத்ய நாராயண் கோயிலில் பயங்கர குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்தது. அந்த வழக்கில் பஞ்சாப் போலீஸார் ஹர்தீப் சிங் நிஜ்ஜாருக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.”

எனத் தெரிவித்துள்ளன.