கணவருடன் ஸ்ரீதேவி

துபாய்

ஸ்ரீதேவி மரணம் குறித்து அவர் கணவர் போனி கபூரை துபாய் காவல்துறையினர் விசாரிக்கவில்லை என துபாய் ஏடான “கலீஜ் டைம்ஸ்”  தெரிவித்துள்ளது.

பிரபல நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை துபாயில் மரணம் அடைந்தார்.   அவருடைய மரணம் மருத்துவமனைக்கு வெளியில் நிகழ்ந்ததால் துபாய் நாட்டு சட்டதிட்டங்களின் படி கடும் விசாரணை நடந்து வருகிறது.   முதலில் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக அவர் உறவினரால் கூறப்பட்டது.

ஆனால் ஸ்ரீதேவியின் மரண அறிக்கையில் அவர் நீரில் மூழ்கி மரணம் அடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.    மேலும் அவர் இரத்தத்தில் அவர் மது உட்கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது.   இதனால் துபாய் அரசு வழக்கறிஞர் ஸ்ரீதேவியின் உடலை அவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க உத்தரவிட மறுத்துள்ளார்.   இந்நிலையில் இரவு முழுவதும் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரிடம் காவல்துறை விசாரணை நடைபெற்றதாக தகவல்கள் வந்தன

ஆனால் போனி கபூரிடம் விசாரணை எதுவும் நடைபெறவில்லை என துபாய் செய்தி ஏடு “கலீஜ்  டைம்ஸ்”  கூறி உள்ளது.    அவருடன் ஞாயிறு அன்றும் சனிக்கிழமை இரவும் மட்டுமே காவல்துறை விசாரணை நடத்தி உள்ளதாக அந்த ஏடு தெரிவித்துள்ளது.   மேலும்  அரசு வழக்கறிஞர் அனுமதி அளித்ததும் ஸ்ரீதேவியின் உடல் பதப்படுத்த தயார் நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.