கோலார் தங்க வயல் என்பதை குறிக்கும் ‘கே.ஜி.எஃப்’ கன்னட படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுக்க அறியப்பட்டவர் – யஷ்.
இப்போது ‘கே.ஜி.எஃப்- 2’ படமும் தயாராகி விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.
யஷ், கர்நாடக மாநிலம் ஹாசன் தாலுகாவில் உள்ள துட்டா பகுதியில் பண்ணை தோட்டம் வாங்கியுள்ளார்.

அதனை சுற்றி காம்பவுண்ட் சுவர் அமைத்தபோது, அவரது பெற்றோருக்கும், ஊர் மக்களுக்கும் இடையே தகராறு உருவானது. தங்கள் நிலத்தில் யஷ் குடும்பத்தினர், காம்பவுண்ட் சுவர் கட்டுவதாக போலீசில் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து யஷ், அங்குள்ள போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
“நாங்கள் சுவர் கட்டும் இடம், ஊர் மக்களுக்கு உரியது இல்லை. அந்த இடம் முன்னர், கோயிலுக்கு சொந்தமாக இருந்தது” என அவர் கூறினார்.
இந்த விவகாரத்தில் போலீசார், இரு தரப்பையும் சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
– பா. பாரதி
[youtube-feed feed=1]