டில்லி

டில்லி மும்பை இடையே அமைக்க உள்ள விரைவு நெடுஞ்சாலை குறித்த முக்கிய விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

டில்லி மற்றும் மும்பை இடையே ஒரு பசுமை விரைவு நெடுஞ்சாலை அமைக்கத் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஒரு திட்டம் அமைத்துள்ளது.  இந்த நெடுஞ்சாலை அமைக்க ஒரு சிறப்பு வாகன நிறுவனம் அமைக்கப்பட்டு அதன் மூலம் நிதி நிர்வாகம், கட்டுமானம் மற்றும் செயல்பாட்டை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது

இந்த சிறப்பு வாகன நிறுவனம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு உரிமையானதாகும். இந்த நெடுஞ்சாலையின் முதல் கட்டப் பணிகள் 2017-18 ஆம் ஆண்டிலிருந்து 2021-22 ஆம் ஆண்டில் நடைபெற உள்ளது  இந்த பணிகள் பாரத் மாலா திட்டத்தின் கீழ் நடக்க உள்ளது..

இந்த திட்டத்தின் முக்கிய விவரங்கள் பின் வருமாறு

சுமார் 1275 கிமீ தூரம் அமைய உள்ள இந்த 8 வழி விரைவு நெடுஞ்சாலை எதிர்காலத்தில் 12 வழிச்சாலையாக மாற்றப்படும்  வக்கைஒயில்  அமையப்பட உள்ளது.

இந்த சாலையில் மணிக்கு 120 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும்.  இந்தியாவின் மிக நீளமான இந்த பசுமை நெடுஞ்சாலையில் டில்லியில் இருந்து மும்பைக்கு சுமார் 11 மணி நேரத்தில் சென்று விடலாம்.

சாலையின் இருபக்கங்களிலும் ஒவ்வொரு 50 கிமீ இடையிலும் 75 வழித்தட வசதிகள் அமைக்கப்பட உள்ளன.

இந்த சாலையின் மொத்த மதிப்பு ரூ.82,514 கோடி ஆகும்.  இதில் 20,928 கோடி நிலம் கையகப்படுத்தும்  செலவாகும்.

இந்த திட்டத்துக்காக 50 லட்சம் மனித நாட்கள் தேவைப்படும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த விரைவு நெடுஞ்சாலை தற்போதைய தேசிய நெடுஞ்சாலை எண் 48க்கு மாற்றாக அமையும்.   இந்த என் எச் 48 நெடுஞ்சாலை 1440 கிமீ தூரம் மற்றும் மிகவும் நெரிசலான வழித்தடமாகும்.