சென்னை:
ண்ணெண்ணெய் பற்றாக்குறை குறித்து சென்னை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி, தற்போது நிதி நெருக்கடி இருந்தாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது விநியோகத் திட்டத்தில் துவரம் பருப்பு, பாமாயில், சர்க்கரை போன்ற பொருட்களை எல்லாம் வழங்கிக் கொண்டுள்ளார். மண்ணெண்ணெய் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால் பருப்பு, ஆயில், சர்க்கரை போன்றவை வழங்குவது போல் வழங்குவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால் மத்திய அரசு அனுமதி கொடுத்தால்தான் மண்ணெண்ணெய் வழங்க முடியும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், மண்ணெண்ணெய் மட்டுமல்ல. மத்திய அரசால் தமிழ்நாட்டிற்கு ஜூலை 2020ல் மாதம் தோறும் 13 ஆயிரத்து 485 மெட்ரிக் டன் கோதுமை ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆகஸ்ட் 2020 மே முதல் 2022 வரை மாதம் 30 ஆயிரத்து 647 மெட்ரிக் டன் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் ஜூன் 2022 முதல் மாதம் 8 ஆயிரத்து 532 மெட்ரிக் டன்னாக குறைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது, மாதம் தோறும் 15 ஆயிரம் டன் கோதுமை வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். மத்திய அரசு கோதுமை, மண்ணெண்ணெய் ஆகியவற்றை குறைத்துள்ளார்கள் என்று கூறினார்.