PoMONE2
#தொலைந்துபோ_மகனே_மோடி என்கிற அர்த்தத்தில் நரேந்திர மோடியை கேரள மாநிலத்தினர் சமூக வலைத்தளங்களில் திட்டி பதிவிட்டு வருகின்றனர்.
 
 
 
Narendra-Modiஇதற்கு காரணம், நேற்று கேரளாவில் உள்ள கசர்கோட்டில் பிரச்சாரம் மேற்கொண்ட மோடி, கேரளாவை சோமாலியாவுடன் ஒப்பிட்டு பேசியது மலையாளிகளை சீண்டிவிட்டுள்ளது. சமூகவலைத்தளங்களில் அவரை வறுத்து எடுத்து வருகின்றனர். ட்ரெண்டிங்கில் #POMONEMODI முதல் மூன்று இடங்களில் இடம்பிடித்திவெருகின்றது. (விஜயகாந்த்  தேர்தலுக்காக கோவிலில் சத்தியமெடுத்துக் கொண்டது மூன்றாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது).

பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “தேசிய வேலைவாய்ப்பின்மை சராசரியை விட கேரளாவின் சராசரி மூன்று மடங்கு அதிகம். கேரளாவில் உள்ள மலைவாழ் சமுதாயத்தில் குழந்தைகள் மரணம் அடையும் விகிதம் சோமாலியாவை விட அதிகமாக உள்ளது” எனக்  கூறினார்.

உண்மை நிலை என்ன:

கேரளா:
57/ 1000 பெண் குழந்தைகள் (2001)
64/1000 ஆண் குழந்தைகள் (2001)
41.47 % இன் வாயநாடு(wayanad) கேரள சராசரி 12%
இந்தியா சராசரி:
88/ 1000 பெண் குழந்தைகள் (2001)
84/1000 ஆண் குழந்தைகள் (2001)
குஜராத் சராசரி:
65/ 1000 பெண் குழந்தைகள் (2001)
59/1000 ஆண் குழந்தைகள் (2001)
மத்திய பிரதேசம் :
110/1000 குழந்தைகள்
சோமாலியா:
137/ 1000
இவ்வாறு ஒரு பொய்யான உரையை யார் எழுதி பிரதமருக்கு கொடுத்தார்கள் எனத் தெரிய வில்லை. இது அவருக்கு உள்ளபடியே பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதுவும், இதுவரை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றிராத பா.ஜ.க. தன் முதல் வெற்றியை பதிக்க முயற்சிக்கும் வேளையில், இவ்வாறான உண்மைக்கு மாறான உரை மக்களின் வெறுப்பையே அவருக்கு சம்பாதித்து தந்துள்ளது.
சில விமர்சனங்கள் :

பி.ஏ. வரலாற்றுப் பாடத்தில் தான் தோல்வி அடைந்தவர் என்பதை மீண்டும் மீண்டும் மோடி நிருபித்து வருகின்றார். மனித வளர்ச்சி குறியீடுகளில் கேரளாவின் மதிப்பீடுகள் குறித்த தன் பேச்சில் உன்மையை திரித்ததின் மூலம் தனக்கு நிகழ்கால அரசியல் அறிவும் இல்லை என்பதை நிருபித்து உள்ளார். கண்ணாடி வீட்டில் வாழ்பவர்கள் கல்லெறியக் கூடாது என்பது  மோடி அறியாததில்  ஆச்சர்யம் ஏதுமில்லை.

POMONE 2
 
 
 

KERALA GUJARAT INDEX COMPARISON
கேரளாவுடன் குஜராத் : ஒரு ஒப்பீடு