திருவனந்தபுரம்

கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஸ்ரீலேகா கேரளாவின் முதல் பெண் போலீஸ் இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ஸ்ரீலேகா.  இவர் 1987ல் கேரளாவின் முதல் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்றார்.  ஐபிஎஸ் ஆவதற்கு முன்பு அவர் ஒரு கல்லூரியில் ஆசிரியையாகவும், பிறகு வங்கி அதிகாரியாகவும் பணி புரிந்தார்.  ஐபிஎஸ் தேர்ச்சி அடைந்த பின்பு இவர் கேரளாவில் மூன்று மாநிலங்களில் போலீஸ் சுப்பிரெண்ட் ஆகவும், மாநில மற்றும் மத்திய அரசின் பல துறைகளில் போலீஸ் டி ஐ ஜி ஆகவும் பணிபுரிந்துள்ளார்.  மாநில, மத்திய அரசுகளிடம் சிறந்த சேவைக்கான பல விருதுகளைப் பெற்றவர்.

ஸ்ரீலேகா பணியில் சேர்ந்து 30 வருடங்கள் ஆகிறது.  சமீபத்தில் போலீஸ் இயக்குனராக அமைச்சரவை தேர்ந்தெடுத்த நால்வரில் இவரும் ஒருவர்.  இதுவரை ஆண்கள் மட்டுமே போலீஸ் இயக்குனராக தேர்ந்தெடுக்கப பட்டுள்ள போது முதல் பெண் போலீஸ் இயக்குனராக ஸ்ரீலேகா தெர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

ஸ்ரீலேகா தனது அத்தனை புகழுக்கும் சேவைக்கும் தன் அன்னை கொடுத்த ஊக்கமே காரணம் என தெரிவித்துள்ளார்.  ஸ்ரீலேகா 1960ஆம் வருடம் டிசம்பர் மாதம் 25ஆம் தேதி பிறந்தவர்,  இவர் தந்தை வேலாயுதன் நாயர், தாயார் ராதாம்மா.  இவரது கணவர் சேதுநாத் ஒரு மருத்துவர். திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிகிறார்.  இவரது ஒரே மகன் கோகுல்.  ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்ற ஸ்ரீலேகா ஒரு எழுத்தாளரும் ஆவார்.  இவர் எழுதிய 9 புத்தகங்கள் அச்சேறி உள்ளது.