திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று 5,022 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கூறி இருப்பதாவது: 5,022 பேருடன் சேர்த்து, கேரளாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3.5 லட்சத்தை கடந்துவிட்டது.
கடந்த 24 மணிநேரத்தில் 21 பேர் பலியாகி உள்ளனர். சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 92,731 ஆக உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.