டில்லி:
சுகாதாரத்தில் கேரளா முதலிடத்தில் உள்ளது. பெரிய மாநிலங்கள் பட்டியலில் உ.பி. பின் தங்கியுள்ளது. சுகாதார துறையில் மாநிலங்களின் செயல்பாடுகள் குறித்த தர வரிசை பட்டியலை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது.
இதில் கேரளா முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களை முறையே பஞ்சாப், தமிழ்நாடு, குஜராத் மாநிலங்கள பிடித்துள்ளன. உ.பி. ராஜஸ்தான், பீகார், ஒடிசா ஆகிய மாநிலங்கள் இந்த பட்டியலில் மோசமான இடத்தை பிடித்துள்ளன. இந்த மாநிலங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பெரிய மாநிலங்களில் வருடாந்திர செயல்திறன் அதிகரிபபு பட்டியலில் ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீர், உ.பி. ஆகிய மாநிலங்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன. சிறிய மாநிலங்கள் பட்டியலில் மிசோராம், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த பட்டியலை வெளியிட்ட நிதி ஆயோக் சிஇஒ அமிதாப் காந்த் கூறுகையில், ‘‘இந்த சுகாதார பட்டியல் கூட்டுறவு மற்றும் கூட்டாட்சி போட்டிக்கு ஒரு தூண்டுகோளாக அமையும். சுகாதார மேம்பாட்டை விரைந்து அடைய இது உதவும்’’ என்றார்.