கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், பரவூரில் உள்ள புட்டிங்கல்  கோவிலில் வருடா வருடம் ஏப்ரல் மாதத்தில்  வாண வேடிக்கை சடங்கு நடைபெறுவது வழக்கம்.
51761631
கோவிலைச் சுற்றி குடியிருக்கும் மக்கள் இந்த  வாண வேடிக்கை நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக்  கோரியதை யடுத்து, கொல்லம் மாவட்டக் கலெக்டர்  வாண வேடிக்கைக்கு தடை விதித்திருந்தார்.
ஆனால் கோவில் தேவஸ்தானம் போர்ட், தடை மீறி,  வாண வேடிக்கை  நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது மட்டுமின்றி, வாண வேடிக்கை  நிகழ்த்தப் படும் இடத்திற்கு மிக அருகிலேயே பக்தர்களை  கூட அனுமதி அளித்திருந்தது. நிகழ்ச்சி சனி இரவு 11.00 மணிக்குத் துவங்கி விடிய விடிய நடைப்பெற்று வந்தது.

images (1)
விபத்து நடந்த புட்டங்கில் கோவில்

எந்தப் பாதுகாப்பு விதிமுறைகளும் பின்பற்றாததாலும், தேவஸ்தானம் போர்ட்டின் அலட்சியத்தாலும் இந்த வெடி விபத்து நிகழ்ந்துள்ளது.
அதிகாலை 3.30 மணீக்கு துவங்கிய வெடிவிபத்து காலை 7.00 மணிக்கு தான் கட்டுக்குள் கொண்டு வரப் பட்டது.
வெடிவிபத்தை விட, அங்கிருந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலர் இறந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்தக் கோர வெடிவிபத்தின் பாதிப்பு, கோவிலைச் சுற்றி இரண்டு கிலோமீட்டர் வரை உணரப்பட்டது.
மனிதச் சதைப் பிண்டங்கள் அரை கிலோமீட்டர் வரை தூக்கிவீசப் பட்டு, மனித உறுப்புகளை போலிசார் சேகரித்த காட்சி காண்போரை பதைபதைக்க வைத்தது.
kerala firework 2
இந்த விபத்தில் 100-120 வரை கொல்லப் பட்டிருக்கலாம் என அஞ்சப் படுகின்றது.
300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
8.00AM: முதலமைச்சர்  உம்மன் சண்டி விபத்து களத்திற்கு 11 மணிக்கு விரைகின்றார்.
இந்தியப் பிரதமர் மோடி மதியம் மூன்று மணிக்கு வந்து சேர்வார் என அறிவிக்கப் பட்டுள்ளது.
உதவி எண்கள்:  0474 2512344, 9497960778, 9497930869
எட்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு ட்ரோனர் விமானமும், மத்தியப் படையும் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்க பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்  தெரிவித்துள்ளார்.
கொச்சியில் இருந்து அவசர மீட்புப் பணிக்கு ஆறு ஹெலிகாப்டர்களில், மருத்துவர்கள் அடங்கியக் குழு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.
கர்நாடகாவில் இருந்து 10 மருத்துவர்கள் குழுவை அனுப்பியுள்ளது கர்நாடகா அரசு.
தேர்தல் காலமாகையால், தேர்தல் கமிஷனின் அனுமதிக்கு பிறகு, பாதிக்கப்படுபவர்களுக்கு நிவாரணம் வழங்கப் படுமென  மாநில அரசால் அறிவிக்கப் பட்டு இருந்தது.
சுகாதாரத் துறை அமைச்சர் வி.எச். சிவக்குமார் அவர்கள்  டி.வி.பி.எம். மருத்துவக் கல்லூரிக்குச் சென்று  சிகிச்சைகளை  மேர்பார்வையிட்டு தேவையான ஏற்பாடுகளைச் செய்யவுள்ளார்.
இந்தியப் பிரதமர் மோடி ” இறந்தவர் குடும்பத்திற்கு  ₹ 2 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ₹ 50,000 மும் வழங்கப் படும்” என அறிவித்துள்ளார்.
 
10.00AM: கோவில் தேவஸ்தானம் மீது வழக்குப் பதிவுச் செய்யப் பட்டுள்ளது.
10.50: AM: INS  காப்ரா , INS கல்பெனி மற்றும்  INS சுனன்யா மீட்புப் பணியில் ஈடுப்படுத்தப் படுமென கப்பல்படை அறிவித்துள்ளது.
11.00 AM: பா.ஜ.க. தலைவர் அமித் ஷா தமது எல்ல பிரச்சாரக் கூட்டங்களையும் ரட்து செய்துவிட்டு, சம்பவ இடத்திற்கு விரைகின்றார்.
11.50 AM:அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா ” மாநில அமைச்சரவை மூன்று மணிக்கு கூடி அவசர ஆலோசனை  நடத்தும்”. எங்கள் முதல் பணி மக்களை மீட்டு நலம்பெரச் செய்வதாகும். மக்கள் சிகிச்சைப்பெறத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வது தலையாகப் பணியாகும். விபத்திற்கு காரணமாவர்கள் குறித்த விசாரனை நடைப்பெற்று வருகின்றது. பத்திரிக்கையாளர்கள் கேள்விக்கு உரிய பதில் அளிக்கப் படும்.
பா.ஜ.க. வின்   அரசியல்: கேரள பா.ஜ.க.வினர் , இந்த விபத்திற்கு மாநில அரசு தான் காரணம் எனக் குற்றம் சாட்டி உள்ளது. நீதிவிசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.