“ஃபேஸ்புக்” மார்க்குடன் வியாபாரம் செய்த கேரள மாணவர்
கடந்த டிசம்பர் 2015ல் ஃபேஸ்புக் உரிமையாளர் மார்க் சுக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரிசிலா சன் இருவருக்கும் பெண் குழந்தைப் பிறந்து மேக்சன் எனப் பெயர் சூட்டி இருந்தார்.
கேரள மாணவர் அமல் அகஸ்டின் என்பவர் கொச்சியில் உள்ள ஒரு (KMEA) பொறியியற் கல்லூரியில் படித்து வருகின்றார். மார்க்-க்கு குழந்தை பிறந்த அடுத்த நாள், இந்த கேரள மாணவர் அந்தக் குழந்தையின் பெயரில் ஒரு இணையதள முகவரியைப் பதிவு செய்து வாங்கினார் (maxchanzuckerberg.org ).
எனவே நேரடியாக ஃபேஸ்புக் இந்த மாணவரைத் தொடர்புக் கொண்டு $700 க்கு தங்களிடன் இந்த வெப்சைட் முகவரியை விற்கும்படி கேட்டுக் கொண்டதை அடுத்து அந்த மாணவர் அதனை மார்ர்கிடம் மிக்க மகிழ்ச்சியுடன் விற்று விட்டார்.
இந்த முகவரி மார்க்-க்கு பயன்படாவிட்டாலும், பிரபலங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களின் பிராண்டு மற்றும் குடும்ப உறுப்பினர் பெயர்களை பாதுகாக்கும் நோக்கில் இவ்வாறு விலைகொடுத்து வாங்குகின்றனர்.
இணையக் குந்துதல் (cyber squatting) என்றால் ஒரு கம்பெனி அல்லது நிர்வாகத்தில் பெயரில் வெப்சைட் துவங்கி வைத்துக்கொண்டு , அந்தக் கம்பெனியிடமே அதனை நல்ல விலைக்கு விற்றுவிடுவது. இவற்றை தடுக்க அமெரிக்காவில் சட்டம் உள்ளது. இந்தியாவில் இது சட்டப் படி தவறில்லை என்றாலும். தார்மீக ஒழுக்கப்படி தவறாகும்.