திருவனந்தபுரம்: கேரளாவில் முன் எப்போதும் இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 5 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தொற்று பதிவாகி உள்ளது.

கேரளவில் சில வாரங்களாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதன் காரணமாக பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந் நிலையில், மாநிலத்தில் முன் எப்போதும் இல்லாத உச்சமாக ஒரே நாளில் 5,376 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 42,786 ஆக உள்ளது.
இன்று ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் ஒட்டு மொத்த எண்ணிக்கை 592 ஆக உள்ளது. இன்று 2,951 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.
[youtube-feed feed=1]