திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதியதாக 8,516 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இன்று புதியதாக 8,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 4,59,647 ஆக அதிகரித்து உள்ளது.

கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 28 பேர் உயிரிழக்க,  மொத்த பலி எண்ணிக்கை 1,587 ஆக உள்ளது. இன்று மட்டும் ஒரே நாளில் 8,206 பேர் குணமடைய மொத்த எண்ணிக்கை 3,72,951 ஆக உள்ளது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.