திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதியதாக 7,020 பேருக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அம்மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: 7,020 பேருக்கு கொரோனா உறுதியானதால் மாநிலத்தின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 4,18,484 ஆக உயர்ந்துள்ளது.
சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 26 பேர் பலியாகி உள்ளனர். ஆகையால் ஒட்டு மொத்தமாக பலி எண்ணிக்கை 1,429 ஆக உயர்ந்து உள்ளது.
மொத்தம் 3,25,166 பேர் கொரோனாவில் இருந்து குணம் பெற்று வீடு திரும்பி இருக்கின்றனர். இன்னமும் 91,784 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.