திருவனந்தபுரம்:
மக்களிடையே கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தவிர்க்கும் வகையில், கைகள் முகத்தை அடிக்கடி கழுவுவது தொடர்பாக பிரபலமான கிராமிய பாடலுக்கு டான்ஸ் ஆடி அதன்மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர் கேரள காவல்துறையினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா தொற்று கைகளைக்கொண்டு முகத்தை தொடுவதன் மூலம் மூச்சுக்குழல் வழியாக உடலுக்குள் நுழைந்துவிடும் என்பதால் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
கண்களுக்கு புலப்படாத கொரோனா வைரஸ் கிருமி, நம்முடன் பழகியவர்கள் மட்டுமின்றி, கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தொட்ட பொருட்களை தொடுவதன் மூலமும் பரவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்று கூறப்பட்டு கருகிறது.
ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 23 முறை நாம் நமது முகங்களை கைகளால் தொடுகிறோம் என்கிறது ஆய்வு. அதனால் கொரோனா பரவாமல் தடுக்க முகத்தை தொடாமல் இருப்பது அவசியம் என்றும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கேரள காவல்துறை யினர், கிராமியப் பாடல் ஒன்றுக்கு டான்ஸ் மூலம் கைகளை கழுவ வேண்டும் என்பதை உணர்த்தி வீடியோ வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோ பாடலானது, ஏற்கனவே வெளியான ‘அய்யப்பனும் கோஷியும்’ என்ற படத்தில் உள்ள ‘கலக்கதா’ என்ற கிராமிய பாடலுக்குபோலீசார் மாஸ்க் அணிந்து நடனமாடி கைகளை எப்படி சுத்தமாக கழுவது என்பதை விளக்கியுள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
[youtube https://www.youtube.com/watch?v=HzcCb7Jcxco?feature=emb_logo]