எர்ணாகுளம்: 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக கேரளா, 4603 நிவாரண முகாம்களை அமைத்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலமான கேரளாவுக்கு திரும்பி வருகின்றனர். அவர்கள் தங்க கேரளா அரசானது ஒரு புதிய திட்டத்தை தொடங்கி இருக்கிறது.

அதற்காக 4,603 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. அதில் 1,44,145 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கியுள்ளனர். இது குறித்து முதலமைச்சர் பினராயி விஜயன் கூறி இருப்பதாவது: வீடற்ற மற்றும் ஆதரவற்ற 1,545 பேருக்கு மேலும் 35 முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. அந்த அனைத்து முகாம்களிலும் உணவு, முகக்கவசங்கள், சோப்புகள், சானிடைசர்கள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் வரும் நாட்களில் இந்த நோக்கங்களுக்காக மேலும் கல்வி நிறுவனங்கள் கையகப்படுத்தப்படும். இது முழுமையடையவில்லை. தொழிலாளர்கள் இன்னும் பல இடங்களில் மோசமான நிலையில் உள்ளனர். எனவே இதை நாங்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம்.

சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் இதை ஒரு தனிப்பட்ட பொறுப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் அனைத்தையும் ஒருங்கிணைக்க முடியும். இந்த வழியில், அனைத்து அமைப்புகளும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.

இந்தி, ஒரியா மற்றும் பெங்காலி மொழிகளில் சிற்றேடுகள், துண்டு பிரசுரங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் புலம்பெயர்ந்த விருந்தினர் தொழிலாளர்களுக்கு அவர்களின் தாய்மொழிகளில் விழிப்புணர்வு வகுப்புகள் உள்ளன.

விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்காக இந்தி பேசக்கூடிய சுகாதார ஊழியர்களும் களத்தில் இறங்கி உள்ளனர். வீடுகள், கோயில்களில் இருக்கும் வளர்ப்பு பிராணிகளுக்கும் உணவு அளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.