கேரளா புதிய தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரியான சாரதா முரளிதரன் தனது கணவர் வேணுவிடம் இருந்து பொறுப்பை ஏற்றதை வாழ்த்தியுள்ள சசிதரூர், எம்.பி. பூங்கொத்து செலவை மிச்சப்படுத்தியிருக்கலாம் என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.

கேரள மாநிலத்தின் 5வது பெண் தலைமைச் செயலாளராக சாரதா முரளிதரன் கடந்த சனிக்கிழமை அன்று பொறுப்பேற்றார்.

அதுவரை தலைமைச் செயலாளராக இருந்த டாக்டர் வி வேணு ஓய்வுபெற்றதை அடுத்து கேரளாவின் 49வது தலைமைச் செயலாளராக சாரதா முரளிதரன் பொறுப்பேற்றுள்ளார்.

ஓய்வு பெற்ற தலைமைச் செயலாளர் டாக்டர் வி வேணு மற்றும் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் சாரதா முரளிதரன் இருவரும் கணவன் மனைவி என்பதும் கணவர் ஓய்வு பெறும்போது, ​​தலைமைச் செயலாளர் பதவியை மனைவி ஏற்பது மாநிலத்தில் இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://x.com/ShashiTharoor/status/1830285204709425269

இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள சசிதரூர், “நான் அறிந்தவரை ஒரு மாநிலத்தின் தலைமைச் செயலாளராக கணவரைத் தொடர்ந்து மனைவி பொறுப்பேற்றிருப்பது இந்தியாவில் இதுவே முதல் முறை. இருவருக்கும் எனது வாழ்த்துக்கள். அரசுக்கு பூங்கொத்து செலவை மிச்சப்படுத்தி இருக்கலாம்” என்று பதிவிட்டுள்ளார்.

1990 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரிகளான டாக்டர் வி வேணு மற்றும் சாரதா முரளிதரன் இருவருக்கும் ஒரு சில மாதங்களே வயது வித்தியாசம் உள்ளதை அடுத்து சாரதா முரளிதரனின் பதவிக்காலம் ஏப்ரல் 25, 2025 வரை முடிவடைய உள்ளது.