டில்லி,

பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்றபோது மயங்கி விழுந்த கேரள எம்.பி., அகமது மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

நேற்று பாராளுமன்றத்தில் இந்த ஆண்டின் முதல் கூட்டமும், பட்ஜெட் கூட்டத்தொடரும் ஆரம்பமானது.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராளுமன்றத்தை தொடங்கி வைத்து, உரை நிகழ்த்திக் கொடிருந்தார். அப்போது, கேரளாவை சேர்ந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் எம்.பி.,யான, இ.அகமது, திடீரென தன் இருக்கையில் மயங்கி சரிந்து விழுந்தார்.

இதைகண்ட அருகிலிருந்த மற்ற எம்.பி.,க்கள், மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அருகில் உள்ள, ஆர்.எம்.எல்., மருத்துவமனைக்கு அகமது அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்தது.

இந்நிலையில், சிகிச்சையின் போது, அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்ட காரணத்தால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

கேரளாவின் மலப்புரம் லோக்சபா தொகுதியிலிருந்து, எம்.பி.,யாகியுள்ள அகமது, காங்., தலைமை யிலான, ஐ.மு., கூட்டணி அரசில் அமைச்சராக இருந்தது குறிப்பிடத்தக்கது.