புதுடெல்லி:
கேரளாவிலிருந்து பசுக்களை கொண்டு சென்றவர் டெல்லியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
கேரள மாநிலம் செங்கன்னூரைச் சேர்ந்த விக்ரமன் என்பவர், உத்திரப்பிரதேசம் மாநிலம் மதுராவில் உள்ள ஆசிரமம் ஒன்றுக்கு பசுக்களை எடுத்துச் சென்றார்.
டெல்லிக்கு ஜுன் 21-ம் தேதி சென்றுள்ளார்.
அங்கிருந்து தன் குடும்பத்தினரை தொடர்பு கொண்ட அவர்,தான் ரத்த வாந்தி எடுத்ததாகவும், தான் ஓர் அறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அடுத்த நாள் தன் மகனை அழைத்துக் கொண்டு உடனே டெல்லி வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
மகன் தந்தையை தொடர்புகொண்டபோது, தெரியாத நபர் ஒருவர் போனை எடுத்து, தந்தை இறந்துவிட்டார் என்று கூறியுள்ளார்.
பின்னர், டெல்லி விமான நிலையம் அருகேயுள்ள ஓட்டலில் தங்குமாறும், தந்தையின் உடல் ஒப்படைக்கப்படும் என்று மகனுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செங்கன்னூர் போலீஸார் கூறும்போது, ஆலப்புலா அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது என்றனர்.
பசுக்களை எடுத்துச் சென்றனர் மர்மமாக இறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விக்ரமனின் உறவினர்கள் புகார் கொடுத்துள்ளனர்.