டெல்லி: உ.பி. மாநிலம் ரேபரேலியில் போட்டியிடும் ராகுல் காந்தி 1,64,249 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். மேலும், கேரளா, மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. பீகாரில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. மே.வங்கத்தில் திரிணாமுல் முன்னிலை வகித்து வருகிறது. ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைக்கும் நிலை உருவாகி உள்ளது. ஆந்திராவில் தெலுங்கு தேசம் ஆட்சி அமைக்கிறது.
18வது மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் 542 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் தலைவிதி இன்று தீர்மானிக்கப்படுகிறது. முதலில் தபால் ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், தொடர்ந்து இவிஎம் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்று வருகிறது. 542 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 64.20 கோடி பேர் வாக்குரிமையை செலுத்தி உள்ளனர். 8,000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
543 இடங்களைக் கொண்ட மக்களவையில், ஆட்சி அமைக்க 272 தொகுதிகளில் வெற்றிபெற்றிருக்க வேண்டும். அதற்கான போட்டிகள் நிலவி வருகிறது. வாக்கு எண்ணிக்கை நிலரவப்படி, தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது. மதியம் 1மணி நிலவரப்படி, தேசிய ஜனநாயக கூட்டணி 300 இடங்களிலும் இண்டியா கூட்டணி 225 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. மாலை நேர நிலவரப்படி, இண்டியா கூட்டணி மேலும் பல தொகுதிகளை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜகவின் கோட்டையாக திகழும் உ.பி.யில் பாஜக கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளது. அங்கு சமாஜ்வாதி, காங்கிரஸ் கூட்டணி பெரும்பாலான இடங்களை கைப்பற்றி வருகிறது. உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தி 1,64,249 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
கேரளாவில் காங்கிரஸ் 13 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. பாஜக 2 தொகுதிகளில் முன்னிலை. மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 30 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. அதுபோல, காராஷ்டிராவில் இந்தியா கூட்டணி 28 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பீகாில் பாஜக கூட்டணி 33 தொகுதிகளில் முன்னிலை
கேரளாவில் உள்ள மொத்தம் 20 தொகுதிகளில் காங்கிரஸ் 13 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 2 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
பீகாில் உள்ள 42 தொகுதிகளில் பாஜக கூட்டணி 33 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இந்தியா கூட்டணி 05 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
மேற்கு வங்காளத்தில் உள்ள 42 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் 30 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 11 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
மகாராஷ்டிராவில் உள்ள மொத்தம் உள்ள 48 தொகுதிகளில், இந்தியா கூட்டணி 28 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜக கூட்டணி 19 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.