கொல்லம்,
கேரளாவில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்த சாமியாரின் ஆணுறுப்பு வெட்டியெடுத்தார் பாதிப்புக்குள்ளான இளம்பெண். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் கொல்லம் பகுதியில் உள்ளது பனாமானா என்ற ஆசிரமம். இந்த ஆசிரமத்தை சேர்ந்த சாமியாரான 54 வயதான ஹரி சாமி எனப்படும் சுவாமி கணேஷனானந்தா.
இவர் சட்டம் பயின்று வரும் 23 வயது இளம்பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் சாமியாரின் அணுறுப்பை வெட்டி வீசினார்.
சம்பவம் பெரும் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தன்று சாமியார் அந்த பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டில் தோஷம் கழிப்பதாக கூறி பூஜையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த வீட்டில் உள்ள இளம்பெண்ணை வன்புணர்வு செய்துள்ளார்.
இந்த கொடூர செயலுக்கு அந்த பெண்ணின் பெற்றோரும் உடந்தையாக இருந்துள்ளனர்.
சாமியாரின் கொடுமையை தாக்க முடியாத அந்த இளம்பெண் , சாமியாரின் மர்ம உறுப்பை கத்தியால் வெட்டி எடுத்து வீசியுள்ளார்.
இதன் காரணமாக மயக்கமடைந்த சாமியார் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், தற்போது மேல் சிகிச்சைக்காக திருவனந்த புரம் மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் சாமியார் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
பாதிக்கப்பட்ட அந்த பெண் காவல்துறையினரிடம் கொடுத்து புகாரில், தன்னை தோஷம் கழிப்பதாக கூறி +2 படிக்கும் (16 வயது) காலம் முதல் தொடர்ந்து அந்த சாமியார் வன்புணர்ந்து வந்துள்ளதாக அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் கேரள முதல்வர் பிரனாயி விஜயன் கூறி உள்ளார்.
கேரள மாநில மகளிர் கமிஷனின் உறுப்பினரான பிரமேலா தேவி கூறுகையில், சாமியாரின் அத்தகைய செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றார்.
இதுகுறித்து சாமியாருக்கு எதிராகவும், பெண்ணின் தாய்க்கு எதிராகவும் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.